ராமநாதபுரம் கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
கீழக்கரை அருகே கோவில் திருவிழாவினை நடத்த விடாமல் தடுக்கும் நபர் மீது நடவடிக்கை எடுத்து, பாரம்பரிய எருதுகட்டு விழாவை நடத்த அனுமதி தர வேண்டும் என மேலவலசை கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு:
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் காஞ்சிரங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மேலவலசை கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ பொன்னும் சிறையெடுத்த அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் ஆவணி மாதம் கிராம முழுவதும் கோவிலுக்கான காப்புகட்டி ஒருவார காலம் விரதம் இருந்து பொன்னும் பொன்னும் சிறை எடுத்த அய்யனார் கோவில் திருவிழாவான நேர்த்த்திக்கடனாக விடும் காளை மாடுகளை உற்சாகத்துடன் வீரர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி அடக்கும் நிகழ்வு காண்போரை பரவசம் ஏற்படுத்தும் நிகழ்வாக நடைபெறும். அடுத்த நாள் சிறப்பு பூஜை நடப்பதுடன் அன்னதானம் உள்ளிட்ட விழா சிறப்பாக நடைபெற இருந்த கடந்த 18.09.2024 அன்று நடைபெற இருந்த சூழ்நிலையில் கிராமத்தில் உள்ள ஒரு குடும்பத்தார் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் நபர்கள் தொடர்ந்து கிராம மக்களை கொலை மிரட்டலால் அச்சுறுத்துவதும் கோவில் விழாவை நடத்த விடாமல் தடுப்பதும் உள்ளிட்ட செயல்பாடுகளை செய்து வருவதால் கிராமத்தின் சார்பில் பலமுறை காவல் நிலையம் மற்றும் கீழக்கரை துணை காவல் கண்காணிப்பாளரிடம் அனுமதி வழங்க காத்திருந்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லாததால் இன்று மாவட்ட ஆட்சியரிடம் கலவரம் செய்து நபர்கள் மீதும் எவ்வித தடையும் இல்லாமல் விழா நடக்க ஏற்பாடு செய்து தர அனுமதி வழங்க கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் இன்று கிராமத்தின் சார்பில் மனு அளிக்க வந்தனர்.