திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை சேர்ந்தவர் வேல்முருகன் (30). இவர் கடந்த 2016ஆம் ஆண்டு அடிதடி வழக்குகளில் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதை தொடர்ந்து அவர் இந்த வழக்கின் விசாரணைக்கு கடந்த ஒரு வருடமாக ஆஜர் ஆகவில்லை. இதனை தொடர்ந்து நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்ததையடுத்து திசையன்விளை போலீசார் வேல்முருகனை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.