தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறையை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறையை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-09-24 04:28 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறையை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறையை கண்டித்து பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் நேற்று மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் முன் ஆசிரியரை VRS-ல் செல்ல அறிவுறுத்திய விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவரை கண்டித்தும், வேலூரில் அரசு பள்ளி மாணவிகள் ரீல்ஸ் செய்ததற்காக ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை கைவிட வேண்டும். தவறு செய்யும் பள்ளி மாணவர்களை கண்டிப்பதற்கான நெறிமுறைகளை வகுத்து அரசாணை வெளியிட வேண்டும், EMIS உள்ளிட்ட கற்பித்தல் பணி சாராத பிற பணிகளுக்கு தனி அலுவலரை நியமிக்க வேண்டும். ஆசிரியர் பணி பாதுகாப்புச் சட்டத்தை உடனே அமல்படுத்திட வலியுறுத்தி தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வி துறையை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News