வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வது குறித்து ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகளுக்கு, தீயணைப்புத் துறையினர் செயல் விளக்கம்.

வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வது குறித்து ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகளுக்கு, தீயணைப்புத் துறையினர் செயல் விளக்கம்.

Update: 2024-09-24 13:49 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வது குறித்து ராசிபுரம் தீயணைப்பு துறை சார்பில் செயல் விளக்கம் நடைபெற்றது. இதில் ராசிபுரம் தீயணைப்புத்துறை நிலை அலுவலர் பலகார ராமசாமி தலைமையில் குழுவினர் கலந்துகொண்டு எதிர் வரும் வடகிழக்கு பருவமழை காலங்களில் இயற்கை சீற்றம்,புயல்,வெள்ளம் ,இடி,மின்னல் மற்றும் மழை போன்றவற்றிலிருந்து பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எவ்வாறு மேற்கொள்ளுதல், தங்கள் உயிர்களையும் ,உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு செய்தனர்.மேலும் நீர்நிலைகளான கிணறு, ஏரி,குளம் உள்ளிட்ட தண்ணீரில் தவறி விழுந்தாலோ,ஆற்றில் அடைத்துச் சொல்லப்பட்டால் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது மற்றும் வீடுகளில் எரிவாய்,மின்சாரம் மூலம் தீப் பற்றினாலோ எவ்வாறு அணைப்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனர். உடன் ராசிபுரம் வட்டாட்சியர் சரவணன் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்...

Similar News