மக்களுடன் முதல்வர் திட்ட நல உதவிகளை அமைச்சர் வழங்கினார் 

குமரியில்

Update: 2024-09-24 13:59 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
குமரி மாவட்ட உணவு பொருள் வழங்கல் துறை சார்பில் புதிய மின்னணு அட்டை வழங்குதல் மற்றும் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலஉதவி  வழங்கும் விழா தக்கலையில் நேற்று (23-ம் தேதி) நடைபெற்றது. கலெக்டர் அழகு மீனா தலைமை வகித்தார். பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய் குமார்மீனா முன்னிலை வகித்தார்.  எம் எல் ஏ -க்கள் ராஜேஷ்குமார், தாரகை கத்பட் உட்பட பலர் பேசினர்.       விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 2 பயனாளிகளுக்க 4,38,000, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி உதவி தொகை, வருவாய்த்துறை சார்பில் இ பட்டா 84 பேருக்கும், தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முதலீட்டுத் தொகை 16 பயணிகளுக்கு ஆறு லட்சத்து 38 ஆயிரத்து 600 மதிப்பில்  உதவி தொகைகள் வழங்கினார்.  மேலும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 27 லட்சத்து 23 ஆயிரத்து 485-ம் புதிய குடும்ப மின்னணு  அட்டை 458 பேருக்கும் அமைச்சர் வழங்கினார். விழாவில் பல கலந்து கொண்டனர்.

Similar News