ஆரணி அருகே இரும்பேடு காய்கறி சந்தை முடிந்த பிறகு அகற்றப்படாமல் உள்ள குப்பைகள்.
ஆரணி செப் 24. ஆரணி அடுத்த இரும்பேடு காய்கறி சந்தையில் விற்பனை முடிந்த பிறகு குப்பைகள் அகற்றாமல் இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
ஆரணி - ஆற்காடு பிரதான சாலை இரும்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் (இந்திரா காந்தி சிலை எதிரில் ) தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஆரணி காய்கனி மார்கெட் நடந்து வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு தமிழ்நாடு, கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து காய் கனிகள் உள்ளிட்ட உணவு பொருட்கள் லாரிகள் மூலம் வருகிறது. அதிகாலை இரண்டு மணியில் இருந்து மற்ற ஊர்களுக்கும் சில்லறை வணிகத்திற்கும் காய் கனி, கருவேப்பிலை, இஞ்சி ,கொத்தமல்லி உள்ளிட்ட பொருட்கள் மொத்தமாகவும், சில்லறை விற்பனையாகவும் காலை எட்டு மணி வரை பரபரப்பாக செயல்படும் பிரதான சந்தையாகும். இதனால் இங்கு சேரும் கழிவு குப்பைகள் அப்படியே விட்டு விடுகிறார்கள் இது போக்குவரத்துக்கும், சுகாதாரத்திற்கும் பெரும் சவாலாக உள்ளது. பிரதான சாலை குப்பை மேடாக காட்சியளிப்பது பொது மக்கள் சமூக ஆர்வலர்கள் மத்தியில் முகம் சுளிக்கும் அவலம் தொடர்கிறது.. சம்மந்தப்பட்ட துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமா..?சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.