பெரணமல்லூர் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை பொதுமக்கள் போராட்டம்

ஆரணி, செப், 24- பெரணமல்லூர் பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கக்கோரி பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பி டி ஓயிடம் மனு கொடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-09-24 17:18 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த மோட்டூர் பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பற்றாக்குறை நிலவி வருவதால் அப்பகுதி மக்கள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய அருகில் உள்ள பம்புசெட்டில் தண்ணீர் பிடித்து தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர். மேலும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து எம் எல் ஏ, பிடிஓ நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு மேல் அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலிகுடங்களுடன் பெரணமல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நேரில் வந்து தண்ணீர் பற்றாக்குறையினை தீர்க்க வேண்டும் என பிடிஓ வெங்கடேசனிடம் மனு கொடுத்து தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் வரை இங்கேயே இருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.. அப்போது பிடிஓ அவர்களிடம் உங்கள் பிரச்சினையை உடனடியாக தீர்க்க நடவடிக்கையினை மேற்கொள்வதாக அவர்களிடம் உறுதி அளித்தார். பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Similar News