ஆவுடையார்கோவில்: ஆவுடையார்கோவில் அருகே சிறுகாசாவயலில் பகுதியில் இரவு நேரத்தில் அனுமதியின்றி மணல் அள்ளப்பட்டு கடத்தப்படுவ தாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அறந்தாங்கி ஆர்டிஓ சிவக்குமார் உத்தரவின்பேரில் தாசில்தார் மார்டின் லுாதர்கிங், வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சிறுகாசாவயல் வெள்ளாற்று பகுதியில் அனுமதியின்றி 2 மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகளை பார்த்ததும் மணல் அள்ளியவர்கள் தப்பியோடி விட்டனர். இதையடுத்து மணலுடன் 2 மாட்டு வண்டிகளையும் வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து நாகுடி போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து நாகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்