கரூரில்,சைகை மொழி வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி. ஆட்சியர் தங்கவேல் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
கரூரில்,சைகை மொழி வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி. ஆட்சியர் தங்கவேல் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
கரூரில்,சைகை மொழி வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி. ஆட்சியர் தங்கவேல் கொடி அசைத்து துவக்கி வைத்தார். செப்டம்பர் 23 முதல் 29ஆம் தேதி வரை காது கேளாதோர் மற்றும் சைகை மொழி விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கரூர்,மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், காது கேளாதோர் மற்றும் சைகை மொழி வாரத்தை முன்னிட்டு கரூர் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவ- மாணவியர், நாட்டு நலப் பணித்திட்ட மாணாக்கர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் மற்றும் அரசு துறை அதிகாரிகள், கல்லூரி மாணவ- மாணவியர் என 200க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர். நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியில், காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாற்று திறனாளிகள் கை சைய்கைகள் மூலம் தங்கள் வாழ்வியல் தேடலுக்கான வழிமுறைகளை அமைத்துக் கொள்ளும் முறை குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், காளியப்பனூர், தாந்தோணி மலை வழியாகச் சென்று அரசு கலைக் கல்லூரியை அடைந்தது.