குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

குமாரபாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Update: 2024-09-26 13:35 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், மாரக்காள்காடு, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் விஜயலட்சுமி, டாக்டர் தேன்மொழி, சுரபி தொண்டு நிறுவனர் மகாலட்சுமி பங்கேற்று, ஊட்டச்சத்து முக்கியம் குறித்தும், ரத்த சோகை தடுப்பது குறித்தும், கர்ப்ப கால மற்றும் குழந்தை பராமரிப்பு பற்றியும் பேசினார்கள். ஊட்டச்சத்து குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதில் 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளின் பெற்றோர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் பங்கேற்றனர்.

Similar News