ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பாரம்பரிய உணவுத் திருவிழா.
ஆரணி,செப் 26. ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா நடத்தினர்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திருவண்ணாமலை மாவட்டம், சார்பில் ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது. இதில் ஆரணி பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள மகளிர்கள் தயார் செய்த சிறுதானிய பாரம்பரிய உணவு வகைகளை காட்சிக்கு வைத்தனர். இதனை பார்வையிட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கட்ராமன், ராஜேஸ்வரி மற்றும் நடுவர்கள் கலந்து கொண்டு முதல் மூன்று பரிசு வென்றவர்களை தேர்வு செய்தனர். சேவூர் கிராமத்தைச் சேர்ந்த செம்பருத்தி, சாய்பாபா, முருகன் துணை மகளிர் குழுக்கள் தயாரித்த உணவு வகைகள் முதல் பரிசினை பெற்றது. மேலும் சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த தீபம், அத்திப்பூ, மல்லி மகளிர் குழுக்கள் தயாரித்த உணவு வகைகள் இரண்டாம் பரிசும், இராட்டிணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த செல்வவிநாயகர், இதயக்கனி மகளிர் குழுவினர் மூன்றாவது பரிசையும் பெற்றனர். இதில் வட்டார இயக்க மேலாளர் முருகன், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கோட்டீஸ்வரி, தேன்மொழி, ஆனந்தி,சிவகாமி, லஷ்மி, ரேகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பார்வையாளர்கள் கலந்து கொண்டு சிறுதானிய உணவுகளை சுவைத்து பார்த்தனர்.