திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி திமுக கிளை செயலாளர் காந்தி பாண்டியன் நேற்று திருநெல்வேலி எம்பி ராபர்ட் புரூஸை நேரில் சந்தித்தார். அப்பொழுது சீவலப்பேரி உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக ஆக்க வேண்டும், கூட்டுறவு வங்கி கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தார். இந்த நிகழ்வின்பொழுது திமுகவினர், காங்கிரஸ் கட்சியினர் உடனிருந்தனர்.