புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் சீட்டு விளையாடுவதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்ற பொன்னமராவதி காவல்துறையினர் வடக்குப்பட்டி முருகேசன் 64, கேசரப்பட்டி மலைச்சாமி 66, சொக்கநாதப்பட்டி அழகு 61, மலையாண்டி ஆறுமுகம் 67, ஆகியோரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர். இதில் ஆயிரம் ரூபாய் ரொக்கம், 52 சீட்டு அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் நான்கு பேரும் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர்.