புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் தூய்மையே சேவை விழிப்புணர்வு முகாம், நகர்மன்றத் தலைவர் இரா.ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. நகர்மன்றத் துணைத் தலைவர் முத்து முன்னிலை வகித்தார். கேம்பிரிட்ஜ் கேட்டரிங் கல்லூரி மாணவர்கள் கல்லூரியிலிருந்து பேருந்து நிலையம் வரை பிளாஸ்டிக் பைகள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர். ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் செலக்சன்சுரேஷ்குமார், துணை ஆளுநர் மருத்துவர் விஜய், அறந்தாங்கி தி போட் சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் அப்துல் பாரி, செயலர் ஆண்டோ பிரவின், பொருளாளர் முபாரக் அலி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். முடிவில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.