ராமநாதபுரம் கோ ஆப் டெக்ஸில் தீபாவளி விற்பனை துவக்கம்

கோ ஆப் டெக்ஸ்டில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி30% விற்பனைக்காக கோ ஆப் டெக்சில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் இன்று விற்பனையை தொடங்கி வைத்தார்.

Update: 2024-09-27 08:16 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ராமநாதபுரம் சாலை தெருவில் உள்ள கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் 30% தீபாவளி தள்ளுபடி விற்பனையை இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் காஞ்சிபுரம், ஆரணி, சேலம், திருபுவனம் பட்டு சேலைகள், கோவை மென்பட்டுச் சேலைகள், பட்டு வேஷ்டிகள், கைத்தறி சுங்குடி சேலைகள், காஞ்சி காட்டன், செட்டிநாடு காட்டன், கோவை கோரா காட்டன், சேலம் காட்டன், பரமக்குடி காட்டன், திண்டுக்கல் காட்டன் மற்றும் அருப்புக்கோட்டை காட்டன் சேலைகள் புதிய வடிவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் புதிய வடிவில் ஏராளமான டிசைன்கள் நவீன யுக ஆடவர்களை கவறும் விதமாக காட்டன் சட்டை ரகங்கள்,வேட்டி, கைலி ரகங்கள், விற்பனைக்கு வந்துள்ளன. மேலும் கைத்தறி ரகங்களின் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு தீபாவளி பண்டிகை முன்னிட்டு பட்டு பருத்தி கைத்தறி ரகங்களை 30%தள்ளுபடி செய்துஒவ்வொரு வருஷமும் தள்ளுபடி வழங்கியுள்ளது. மேலும் கடந்த ஆண்டு 48.88 லட்சங்களுக்கு விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 72 லட்சங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Similar News