ராமநாதபுரம் மாதாந்திர நகராட்சி கூட்டம் நடைபெற்றது

ராமநாதபுரம் மாதாந்திர நகராட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில்(48) சாதாரண தீர்மானங்கள் (12) அவசர தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

Update: 2024-09-27 08:31 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ராமநாதபுரம் நகராட்சி கூட்ட அரங்கில் இன்று மாதாந்திர கூட்டம் நகராட்சி தலைவர் ஆர்.கே.கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் துனைத்தலைவர் பிரவின்தங்கம், மற்றும் 33 கவுன்சிலர்களும் கலந்துகொண்டனர். இதில்(48) சாதாரண தீர்மானங்களும் (12) அவசர தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. இதில் கவுன்சிலர்கள் அனைவரும் பல்வேறு கேள்விகளை கேட்டு தங்களுடைய பிரச்சனைகளை எழுப்பினர். ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பெருக்கெடுத்து ஆறாக ஓடி சுகாதாரக் கேட்ட ஏற்படுத்தி வருகிறது. இதைப் பற்றி பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை இதனால் நோய் பரவும் நிலையுள்ளது என்றனர்.இதில் திமுக 24 ஆவது வார்டு கவுன்சிலர் ரமேஷ்கண்ணா பேசும்போது பொதுமக்களின் அடிப்படை தேவையான குடிநீர், ரோடு, மின்சாரம் இவைகளை சரியான முறையில் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் அதற்கு தான் நம்மை கவுன்சிலராக தேர்ந்தெடுத்துள்ளனர். எனது வார்டில் குடிநீர் பிரச்சனை ஓரளவு தீர்ந்தாலும் குண்டு குழியுமான ரோடுகளால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்திற்கு உள்ளாகின்றனர். மழைக்காலத்திற்குள் ரோடுகளை சீரமைத்து கொடுங்கள் என்றார். நகராட்சி தலைவர் ஆர்.கே.கார்மேகம் இப் பிரச்சனை உடனடியாக சரி செய்யப்படும் என்றார்.

Similar News