பள்ளி ஆசிரியை பணியிட மாறுதல் செய்வதை கண்டித்து பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

பள்ளி ஆசிரியை பணியிட மாறுதல் செய்வதை கண்டித்து பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2024-09-27 13:38 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பரமத்தி வேலூர், செப், 27: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் அரசு  ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஈஸ்வரி என்ற ஆசிரியை கடந்த 12 ஆண்டுகளாக விலங்கியல் துறையில் பணியாற்றி வருகிறார். எனவே கடந்த 24ஆம் தேதி அவருக்கு எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் தங்களை மல்லசமுத்திரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்துள்ளதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார் இதற்கு  அவர்  என்ன காரணம் என்று கேட்டதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தமது பள்ளியில் அதிக ஆசிரியர்கள் இருப்பதாக கூறி தங்களை பணியிட மாற்றம் செய்திருப்பதாக மாவட்ட கல்வி அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார் மேலும் அவரிடம் தங்கள் பணியிடம் மாற்றம் செய்ததற்கான உத்தரவு படிவத்தை பெற்றுக் கொள்ளுமாறு  கூறினர்  இதற்காக ஆசிரியை  மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இன்று மாலை அவர் தன்னைப் பணியிட மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி வளாகத்தில் ஆசிரியை ஈஸ்வரி அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் அப்பொழுது  பள்ளியின் உடன் பணி புரியும் ஆசிரியர், ஆசிரியைகள்   மற்றும் விலங்கியல் துறை மாணவர்கள் அவருக்கு ஆதரவாக அவருடன் அமர்ந்து  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த நிலையில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் பாண்டமங்கலம்  பகுதியில் நன்றி தெரிவிப்பு கூட்டத்திற்காக வந்திருந்தார். பள்ளியில் ஆசிரியை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட  தகவல் தெரிந்து பள்ளிக்கு வந்த  பாராளுமன்ற உறுப்பினர் ஆசிரியர் மற்றும் மாணவர்களை அழைத்து  சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பின்னர்  நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து எடுத்துரைத்தார். மேலும் மாவட்ட ஆட்சியரிடம் விலங்கியல் துறை ஆசிரியை ஈஸ்வரி இதே பள்ளியில் பணி செய்ய தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் விலங்கியல் துறை ஆசிரியை ஈஸ்வரி  இதே பள்ளியில் மீண்டும் பணி செய்ய இன்னும் இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறி உறுதி அளித்த பின்னர்  ஆசிரியர்கள் மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தினால் பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Similar News