என் கவுண்டரில் உயிரிழந்த வட மாநில கொள்ளையனின் உடல் பிரேத பரிசோதனை நீதிபதி முன்னிலையில் தொடங்கியது
நாமக்கலில் என் கவுண்டரில் உயிரிழந்த வட மாநில கொள்ளையனின் உடல் பிரேத பரிசோதனை நீதிபதி முன்னிலையில் தொடங்கியது
கேரளா மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம் களில் கொள்ளையடித்து விட்டு கண்டெய்னர் லாரியில் 7 வடமாநில கொள்ளையர்கள் தப்பி சென்ற போது நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே தோப்புக்காடு ஓடை பகுதியில் போலீசார் சுற்றி வளைத்து பிடித்ததில் தப்பி ஓட முயன்ற போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஹரியானா மாநிலம் பிலால் மாவட்டத்தை சேர்ந்த ஜூமாந்தீன்(37) என்பவன் உயிரிழந்தான். இதில் அஜார் அலி படுகாயமடைந்து சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். என் கவுண்டரில் உயிரிழந்த ஜூமாந்தீன் உடல் பிரேத பரிசோதனைக்காகநாமக்கல் அரசு மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலை காண சகோதரர் உட்பட 4 பேர் மருத்துவமனைக்கு வருகை தந்து ஜூமாந்தீன் உடலை பார்வையிட்டனர். இந்த நிலையில் குமாரபாளையம் நடுவர் நீதிமன்ற நீதிபதி மாலதி, நாமக்கல் வட்டாட்சியர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. பிரேத பரிசோதனை நடைபெறும் நிகழ்வை போலீசார் வீடியோ எடுத்து வருகின்றனர். பிரேத பரிசோதனை செய்த பிறகு ஜூமாந்தீன் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க பட உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.