ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தில் ஒருநாள் பயிற்சி பட்டறை
ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தில் உடன்குடி பிறைகுடியிருப்பு சிவந்தி கலை மற்றும் அறிவியல மகளிர் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தில் உடன்குடி பிறைகுடியிருப்பு சிவந்தி கலை மற்றும் அறிவியல மகளிர் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடந்தது. தொன்மம் மாறாதஆதிதமிழர் வாழ்வியல் என்ற தலைப்பில் இந்த பயிற்சி பட்டறையை நடத்தினர். தமிழ்த்துறை தலைவர் மு. இரா. வோஷாம்பிகா தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் சா.சசிகலா முன்னிலை வகித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கருத்துரை வழங்கினார். அதன் பின் மாணவிகள் ஆதிச்சநல்லூர் சைட் மியூசியம், சி சைட் போன்றவற்றை பார்வையிட்டனர். சைட் பொறுப்பாளர் அந்தோணி இடங்களை பற்றி விளக்கமளித்தார். உதவி பேராசிரியர்கள் பரிமளா, தனமுத்து செல்வி, ரஜிலா உள்பட பலர் கலந்துகொண்டனர். மாணவிகளுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது.