உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் திருச்செங்கோட்டில் கொண்டாட்டம்
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் திருச்செங்கோட்டில் கொண்டாட்டம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே திருச்செங்கோடு நகர திமுகவினர் சார்பில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பதவியேற்றதினை கொண்டாடும் வகையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் மற்றும் பட்டாசுகள் வெடித்தும் ஆரவாரத்துடன் கொண்டாடினர். மேலும் இசைக்கலைஞர்கள் மேள தாளத்துக்கு ஏற்றவாறு ஆடி மகிழந்தனர். இதன் காரணமாக அப்பகுதியே திருவிழா போல் காட்சியளித்தது. இந்த நிகழ்வில்தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு நகரச் செயலாளர் மற்றும் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன், வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு, நெசவாளர் அணி அமைப்பாளர் சரவணன் முருகன் ஆகியோர் உள்ளிட்டநகரக் கழக மாவட்ட கழக நிர்வாகிகள், நகர் மன்ற உறுப்பினர்கள், இளைஞர் அணி மகளிர் அணி தொண்டர் அணி ஆகிய சார்பு அணிகளை சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.