மக்கள் குறை களையும் நாள் கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் 510 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது

Update: 2024-09-30 16:10 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், கலைஞரின் கனவு இல்லம் திட்டம், தொழில் கடனுதவி, முதியோர், விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 510 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். மேலும், மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 22 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பேட்டரி பொருத்தப்பட்ட மூன்று சக்கர சைக்கிளினை மாவட்ட ஆட்சியர் பயனாளிக்கு வழங்கினார். இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆர்.ஐஸ்வர்யா, சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உலகநாதன், உதவி ஆட்சியர் (பயிற்சி) சத்யா மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News