கோட்டைப்பட்டினம் அருகே உள்ள செல்லநேந்தல் பகுதியை சேர்ந்த அழகுராஜன். இவர் மீன்பிடித் தொழில் செய்து வந்தார். இவர் மதுவுக்கு அடிமையானவராக இருந்துள்ளார். நேற்று இரவு மது போதையில் வீட்டிற்கு சென்ற இவர் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். உடலை கைப்பற்றி மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.