ராமநாதபுரம் பள்ளி மாணவ மாணவிகளின் பேரணி நடைபெற்றது
ராமநாதபுரம் பெருங்குளம் அல்கலம் சர்வதேச பள்ளியில் நடைபெற்ற 'தூய்மை என்பது சேவை' என்ற விழிப்புணர்வு பேரணியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்
ராமநாதபுரம் பெருங்குளம் அல்கலம் சர்வதேச பள்ளியில் நடைபெற்ற 'தூய்மை என்பது சேவை' என்ற விழிப்புணர்வு பேரணியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். அல்கலம் கல்வி குழுமத்தின் நிறுவனர் ஷேய்க் அப்துல் குத்தூஸ் அஸ்ஹாரியின் வழிகாட்டுதலில், பள்ளி முதல்வர் மெகபூப் நிஷா அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட இந்த பேரணி, ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கி புதிய பேருந்து நிலையம் வரை சென்றடைந்தது. 'தூய்மையே சேவை', 'இயற்கையே தூய்மை', 'சமுதாயத் தூய்மை' என்ற முழக்கங்களுடன் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். மாணவர்கள் தூய்மை இந்தியா குறித்த வசனங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தி நடந்து சென்று, பொதுமக்களிடம் தூய்மையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். இந்த பேரணி தூய்மை இந்தியா இயக்கத்திற்கு பள்ளியின் பெரும் பங்களிப்பை எடுத்துக்காட்டுகிறது. மேலும், மாணவர்களிடையே தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, சமுதாயத்தில் தூய்மை நோக்கி ஒரு புதிய அலை உருவாக உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளி ஆசிரியர் சுதா நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை செய்திருந்தார். மாவட்ட காவல்துறை மற்றும் போக்குவரத்து துறையினர் பேரணியின் பாதுகாப்பை கவனித்தனர்.