ராமநாதபுரம் முதியோர் தின விழா நடைபெற்றது

ராமநாதபுரத்தில் உலக முதியோர் தின விழா ஏராளமானோர் பங்கேற்பு.

Update: 2024-10-01 07:14 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
உலக முதியோர் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு சார்பில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜனார்த்தனன் மாளிகையில் உலக முதியோர் தின விழா மாவட்ட தலைவர் ஜேசுராஜ் தலைமையில் கொண்டாடப்பட்டது, மாவட்டத் துணைத் தலைவர் அன்சாரி முன்னிலை வகித்தார், மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார், சிறப்பு விருந்தினர்களாக மருத்துவர் மதுரம் அரவிந்தராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் தேன்மொழி, ஈஸ்ட் கோஸ்ட் ராம்நாடு ரோட்டரி சங்க தலைவர் செங்குட்டுவன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர், இதில் ராமநாதபுரம் மாவட்ட அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர், மாவட்ட பொருளாளர் ரவீந்திரன் நன்றி உரையாற்றினார்.

Similar News