மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ் மாதேஸ்வரன்.

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் குழுவின் தலைவர் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-10-01 12:05 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA) கூட்டம், குழுவின் தலைவர் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் தலைமையில், குழுவின் உறுப்பினர் செயலர் / மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, துணைத் தலைவர்கள் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் , குழுவின் உறுப்பினர் / திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் , மேயர் து.கலாநிதி அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் ஒன்றிய அரசின் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரி நீர்பாசன திட்டம், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், மண் வள அட்டை இயக்கம், நுண்ணீர் பாசனத்திட்டம், பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித்திட்டம், பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டம், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் சூரிய ஒளி சக்தியுடன் இயங்க கூடிய மின்மோட்டார் பம்புகள் வழங்கும் திட்டம், சூரிய கூடார உலர்த்தி அமைக்கும் திட்டம், அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்ப இயந்திரங்கள் வழங்கும் திட்டம், வேளாண் இயந்திரங்கள் துணை இயக்கம், வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தி பம்ப் செட்டுகளுக்கான பழுது நீக்கும் பராமரிப்பு மையம், நபார்டு திட்டம், வேளாண் இயந்திரங்களுக்கான கூடாரம் கட்டுதல், நாமக்கல் விற்பனைக்குழு (e-NAM) திட்டம் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தோட்டக்கலைத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நுண்ணீர் பாசனம், பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித்திட்டம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைவருக்கும் வீடு திட்டம், தேசிய சுகாதார பணி, தொடக்க கல்வி, பள்ளிக்கல்வி சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் விலையில்லா சீருடை, விலையில்லா பாட புத்தகம் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் இணை உணவுத்திட்டம், போஷன் அபியான் திட்டம், மதிய உணவுத்திட்டம், சத்துணவு உண்ணும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை, பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம், மாவட்ட தொழில் மையம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், தேசிய அளவில் நிலஅளவை ஆவணங்களை நவீனமயமாக்குதல் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் தீன்தயாள் அந்தோதயா யோஜனா திட்டம், தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா திட்டம், சாலையோர வியாபாரிகளுக்கான வங்கிக்கடன் வழங்கும் சிறப்புத்திட்டம், சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம், கனிம வளத்துறை, நீர்வளத்துறை, டிஜிட்டல் இந்தியா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஜல் ஜீவன் திட்டம், தேசிய நெடுஞ்சாலை திட்டம், நெடுஞ்சாலைகள் துறை, நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் திட்டம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்திட்டம், உஜ்வாலா திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நகராட்சி நிர்வாகம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் தூய்மை பாரத இயக்கம், நவீன தொழில்நுட்ப முறையில் குப்பைகளை அகற்றுதல், தனிநபர் இல்லக் கழிப்பிடம் கட்டுதல், வள மீட்பு மையம் கட்டுதல், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம், சமுதாயக் கழிப்பிடம் கட்டுதல், பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஊரக குடிநீர் இயக்கம், பாரத பிரதமர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம், பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம யோஜன உள்ளிட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பணிகள் அனைத்தும் திட்ட வழிகாட்டி நெறிமுறைகளின்படி தரமாகவும், குறித்த நேரத்திலும் முடிக்கப்பட வேண்டும் என குழுவின் தலைவர் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் அவர்கள் தெரிவித்தார். இக்கூட்டத்தில் துணை மேயர் செ.பூபதி, மாவட்ட ஊராட்சி தலைவர் ஆர்.சாரதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஸ் கண்ணன் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.வடிவேல், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News