கும்பகோணத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு: ராசிபுரம் ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து அழைப்பு விடுத்த மாநில பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர்...
கும்பகோணத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு: ராசிபுரம் ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து அழைப்பு விடுத்த மாநில பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர்...;
நாமக்கல் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டம் ராசிபுரம் ஜாமியா பள்ளி வளாகத்தில் மாவட்டத் தலைவர் முபின் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தௌலத்கான் வரவேற்புரையாற்றினார். மாவட்ட மாநகர நிர்வாகிகள் எம்.மஸ்தான் அலி, அப்துல் சலீம் (எ) பண்டு, காதர் ஷரீப் (எ) பண்டு நூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பொதுக்குழுக் கூட்டத்தில், மேலிட பார்வையாளரும், மாநிலபொதுச் செயலாளருமான முன்னாள் எம்எல்ஏ கே.எம்.முகமது அபுபக்கர், மாநில துணைச் செயலாளர் அன்சர் பாஷா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். வரும் ஜனவரி 28ஆம் தேதியில் கும்பகோணத்தில் நடைபெற உள்ள மஹல்லா ஜமாத் மாநாட்டில் அதிகமான நபர்கள் கலந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் அனைத்து பள்ளிவாசல் உடைய நிர்வாகிகள் மொத்த பள்ளிகள் ஜமாத்தார்கள் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் ராசிபுரம் சபீர் நன்றி உரையாற்றினார். பின்னர், செய்தியாளர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் 8,000 மஹாலா ஜமாத்துக்கள் உள்ளன. கும்பகோணத்தில் நடக்கும் மாநில மாநாட்டில் மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்க எல்லா மாவட்டத்திற்கும் சென்று கொண்டிருக்கிறோம். முஸ்லிம் லீக்கில், 52 மாவட்டங்கள் உள்ளன. இதுவரையில், 30 மாவட்டங்களுக்கு சென்று விட்டோம். அதன் அடிப்படையில் ராசிபுரத்திற்கு வந்துள்ளோம். ஒன்றிய பாஜக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் எங்கள் சமுதாயத்திற்கு எதிராக பல்வேறு சட்டங்கள். அதாவது, முத்தலாக் தடை, மாட்டுக்கறி தடை, கஷ்மீர் தனி அந்தஸ்த்து பதித்தல், குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு இடமில்லை, தற்போது வக்பு திருத்தச் சட்டம் என பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறோம். வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் வாக்குகள் பிரியாமல் ஒருமுகப்பட்டு மதசார்பற்ற கூட்டணி வெல்ல வேண்டிய அவசியம் குறித்தும், விளக்கி வருகிறோம். வாக்காளர் திருத்தப்பட்டியலில் விடுபட்டிருந்தால், அந்தந்த பள்ளிவாசலில் உள்ளவர்கள் கண்டறிந்து வாக்காளர்களாக சேர்க்க வேண்டிய பொறுப்பு உள்ளது. வக்பு வாரியத்தில் பதிவு செய்யாத வாரிய மும் உள்ளது. அனைத்தையும் பாதுகாத்து அதனை முறையாக கட்டமைப்போடு செயல்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். இஸ்லாமிய வழிபாடு தலங்கள் பல்வேறு ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து முறையாக பட்டா இல்லாமல் உள்ளன. தமிழக அரசு பட்டா வழங்க தமிழக அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். ரமலான் நோன்பு கஞ்சிக்கு பச்சரிசி வழங்குவார்கள். அதனை விரைவாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி பெறுவோம் என்றார்.