பரமத்திவேலூரில் திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் நூலகம் திறப்பு.
பரமத்தி வேலூரில் திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் நூலகம் திறப்பு விழா நடைபெற்றது. கே.எஸ்.மூர்த்தி கலந்து கொண்டு நூலகத்தை திறந்து வைத்தார்;
பரமத்தி வேலூர்,டிச.20- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பேருந்து நிலையம் அருகே திமுக இளைஞரணி அணி சார்பில் கலைஞர் நூலகம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நவலடி ராஜா தலைமை வகித்தார். பரமத்தி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தனராசு, பரமத்தி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் லலித்குமார், நாமக்கல் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பட்ட அணி துணை அமைப்பாளர் மகிழ்பிரபாகரன், நாமக்கல் மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் கண்ணன், பொத்தனூர் பேரூராட்சி தலைவர் கருணாநிதி, பாண்டமங்கலம் பேரூராட்சி தலைவர் சோமசேகர் ,பரமத்தி வேலூர் பேரூர் கழக செயலாளர் முருகன் ,பரமத்தி பேரூர் கழக செயலாளர் ரமேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமத்தி வேலூர் பேரூர் கழக அவைத் தலைவர் மதியழகன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான கே.எஸ்.மூர்த்தி கலந்து கொண்டு கலைஞர் நூலகத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட வழக்கறிஞர்கள் அணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், நாமக்கல் மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் அன்பழகன் மற்றும் மாவட்ட ,ஒன்றிய ,பேரூர் கழக பொறுப்பாளர்கள், வார்டு கழகப் பொறுப்பாளர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், பல்வேறு அணி பொறுப்பாளர்கள், மகளிர் அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.