ஆயிரக்கணக்கான இந்துக்கள் தங்களின் முன்னோர்களின் ஆசி பெற திலதர்ப்பணம்
புரட்டாசி அமாவாசை எனும் மகாளய அமாவாசையை முன்னிட்டு திண்டுக்கல்லில் ஆயிரக்கணக்கான இந்துக்கள் தங்களின் முன்னோர்களின் ஆசி பெற திலதர்ப்பணம் செய்தனர்
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி அமாவாசையை மகாளய பட்ச அமாவாசையாக கருதி அன்று திண்டுக்கல் தங்களின் முன்னோர்கள் ஆசி பெறுவதற்காக தில என்னும் எள் தர்ப்பணம் மற்றும் பிண்ட தர்ப்பணம் செய்வது வழக்கம். அதனை முன்னிட்டு திண்டுக்கல் கோபாலசமுத்திர குளக்கரையில் பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் தங்களின் முன்னோர்கள் ஆசி பெறுவதற்காக வாழையிலை போட்டு தேங்காய், பழம், அரிசி காய்கறி, எள், மாவு பிண்டம் ஆகியவற்றை படைத்து தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்தனர். ஆச்சாரியார்கள் மந்திரம் ஓத அனைவரும் பின் தொடர்ந்து மந்திரங்கள் உச்சரித்து தங்களின் முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டிக் கொண்டனர். பின்னர் எள் மற்றும் பிண்டம் ஆகியவற்றை குளக்கரையில் கரைத்து வழிபாடு செய்தனர்.