ரவுடி மீது துப்பாக்கி சூடு
திண்டுக்கல் மாலப்பட்டி சுடுகாட்டு பகுதியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற போது போலீசார் துப்பாக்கி சூடு
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே கடந்த வாரம் ரவுடி இர்ஃபான் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முத்தழகு பட்டியைச் சேர்ந்த ரிச்சர்ட் சர்ச்சின், எடிசன் சக்கரவர்த்தி, மார்ட்டின் நித்திஷ், பிரவீன் லாரன்ஸ் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்நிலையில் படுகொலையின் போது பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் படுகொலை சம்பவத்தின் அவர்கள் அணிந்திருந்த உடைகள் ஆகியவற்றை கைப்பற்று வதற்காக ரிச்சர்ட் சச்சினை திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி மற்றும் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் பாதுகாப்புடன் திண்டுக்கல் அடுத்துள்ள மாலப்பட்டி சுடுகாட்டு பகுதிக்கு அழைத்துச் சென்றனர் அப்பொழுது அங்கு மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ரிச்சர்ட் சச்சின் காவலர் அருண் பிரசாதின் இடது கையில் வெட்டி விட்டு தப்பி ஓட முயன்றார். அப்பொழுது ஆய்வாளர் வெங்கடாசலபதி தனது கை துப்பாக்கியால் ரிச்சர்ட் சச்சினின் வலது காலில் மொட்டிக்கு கீழே சுட்டார் இதில் பலத்த காயம் அடைந்தார் ரிச்சர்ட் சச்சின் அங்கேயே மயங்கி விழுந்தார். இதனை அடுத்து ரிச்சர்ட் சச்சின் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அரிவாளால் வெட்டப்பட்ட காவலர் அருண் பிரசாத் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.