ராமநாதபுரம் காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி
முதல் நிலை காவலர்குடும்பத்திற்கு காக்கி உதவும் கரங்கள் மூலம் நிதி உதவி வழங்கினர்
ராமநாதபுரம் தமிழ்நாடு காவல்துறையில் 2011 ஆம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்த மாநிலம் முழுவதும் உள்ள காவலர்கள் 5,500 நபர்கள் ஒன்று சேர்ந்து 2011 காக்கி உதவும் கரங்கள் என்ற குழு டெலிகிராம், வாட்ஸ் அப் மூலமாக ஒன்று சேர்ந்து 38வது பங்களிப்பாக ரூபாய் 27,03,000உதவி பெறப்பட்டது ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து உடல் நலக்குறைவால் மறைந்த முதல்நிலை காவலர் தசரதன் அவர்களின் குடும்பத்திற்கு எல் ஐ சி மூலம் தசரதனின் அப்பா அம்மா பெயரில் 12,50,000 லட்சம் டெபாசிட் செய்து பென்ஷன் திட்டத்திலும் அவரது விருப்பத்தின் படி அவரது அண்ணன் அக்கா அவர்களுக்கு தலா 2,50,000 வீதம் ரூபாய் 12,50,000 டெபாசிட் செய்தும் ரூபாய் 2,03,000 காசோலையாகவும் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .சந்தீஸ் அவர்கள் மூலம் தசரதனின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.