கொள்ளையடிக்கப்படும் மணல் கண்டுகொள்ளாத வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர்
தாராட்சியில் ஆரணி ஆற்றில் சட்டவிரோதமாக கொள்ளையடிக்கப்படும் மணல் கண்டுகொள்ளாத ஊத்துக்கோட்டை வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர்
திருவள்ளூர் தாராட்சியில் ஆரணி ஆற்றில் சட்டவிரோதமாக கொள்ளையடிக்கப்படும் மணல் கண்டுகொள்ளாத ஊத்துக்கோட்டை வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாராட்சி கிராமத்தில் ஆரணி ஆற்றில் உள்ள ஆற்று மணலை பட்டப் பகலில் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு டிராக்டர்கள் மூலம் சட்டவிரோதமாக மணலை திருடி விற்பனை செய்து வருகின்றனர் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் மணல் கொள்ளையை தடுக்க தவறுவதால் ஆரணி ஆற்றில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மணல் கொள்ளையானது நடைபெற்று வருகின்றது இதன் காரணமாக கனமழை காலங்களில் ஆற்றின் கரையை ஒட்டிய பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்படுகிறது எனவே ஊத்துக்கோட்டை காவல் துறையினர் மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்களை கைது செய்து மணல் எடுக்க பயன்படும் ஜேசிபி டிராக்டர் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மணல் கொள்ளையில் ஈடுபடும் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது