மணல்மேடு- டூவீலர்கள் மோதல்- கணவன்- மனைவி படுகாயம்.
மணல்மேடு- டூவீலர்கள் மோதல்- கணவன்- மனைவி படுகாயம்.
மணல்மேடு- டூவீலர்கள் மோதல்- கணவன்- மனைவி படுகாயம். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை, ராமகிரி,ஆர்சி தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் வயது 50.இவரது மனைவி ஜெனிவா மேரி 51. இவர்கள் இருவரும் அக்டோபர் 4 ஆம் தேதி மதியம் 12 மணியளவில், கரூர்- திண்டுக்கல் சாலையில் அவர்களது டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர். இவரது வாகனம் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, மணல்மேடு பஸ் ஸ்டாப் எதிரே செல்லும் போது, அதே சாலையில் பின்னால் வந்த, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்கா இனங்கனூர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் விக்னேஷ் வயது 20 என்பவர் ஓட்டி வந்த மற்றொரு டூவீலர், ஆரோக்கியசாமி ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால், டூவீலரில் சென்ற கணவன் மனைவி இருவரும் வாகனத்துடன் கீழே விழுந்தனர். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டதால், இருவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஆரோக்கியதாசை மதுரை அரசு மருத்துவமனையிலும், ஜெனிவா மேரியை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் அறிந்த இவர்களது மகள் ஆரோக்கிய மெரினா வயது 20 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், டூவீலரை கவனக்குறைவாகவும், வேகமாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.