தொடர் மழையால் வயலில் சாய்ந்து சேதமான நெற்பயிர்கள்

மழையால் வயலில் சாய்ந்து சேதமான நெற்பயிர்கள் நிவாரணம் வேண்டி விவசாயிகள் கோரிக்கை

Update: 2024-12-22 02:13 GMT
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள், சமீபத்தில் பெய்த தொடர் மழையால் வயலில் தண்ணீர் தேங்கி சேதமடைந்து கிடக்கிறது. மேலும் பெஞ்சல் புயல் காரணமாக அரூர், தீர்த்த மலை, கோபிநாதம்பட்டி, மொரப்பூர், கம்பைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனால் சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகள் சாகுபடி செய்து அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள், மழையின் போது வீசிய சூறைக்காற்றுகு வயலில் சாய்ந்து படுத்து விட்டது. மழை விட்டு வெயில் வந்தவுடன் அறுவடை செய்யவிடலாம் என இருந்த விவசாயிகளை, மேலும் அச்சுறுத்தும் வண்ணம், நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை தொடர் மழை பொழிந்து வருவதால். சாய்ந்த நெற்கதிர்கள் நீரில் மூழ்கின.. சில இடங்களில் நீர்வடியாததால் நெற்பயிர்கள் சேதமடைந்து வருகிறது. எனவே, வேளாண் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை நேரில் ஆய்வு செய்து, அரசின் நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் என இன்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News