அடிப்படை வசதிகள் கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
வெப்படை பேருந்து நிறுத்த பகுதி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படையில் பல்வேறு மக்கள் பிரச்சினைகளை சரி செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தோழர் கவின் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை அன்று. இதில் மாவட்ட செயலாளர் மணிகண்டன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் எஸ்.சந்திரமதி ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். வெப்படை பகுதியில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (Govt ITI) அமைத்து தர வேண்டும். வெப்படை பேருந்து நிறுத்தத்தில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் வெப்படை நால்ரோட்டில் வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள காலை மற்றும் மாலை வேலைகளில் டிராபிக் போலீஸ் மூலம் வாகன போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் வெப்படையில் இயங்கி வரும் ESI மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை வேண்டும் வெப்படை பகுதியில் உள்ள ஸ்பின்னிங் மில்களில் தொழிலாளர்களுக்கு PF, ESI போன்ற சட்ட சலுகைகள் தொழிலாளர்களுக்கு வழங்குவதில்லை. இதை தொழிலாளர் நலத்துறை கண்காணித்து தொழிலாளர் உரிமைகளை பாதுகாத்திட வேண்டும். வெப்படை பகுதியில் இளைஞர்கள் பயன்படுத்த விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும். வெப்படை பகுதியில் உள்ள எம்ஜிஆர் நகர், காந்தி நகர், காமராஜ நகர், பாரதி நகர், NC காலனி உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படுவதில்லை. பஞ்சாயத்து நிர்வாகம் முறையாக தூர்வாரி கொசு மருந்து அடித்திட வேண்டும். காந்திநகர் பகுதியில் உள்ள பாலியை சுற்றி கம்பி வேலி அமைத்து குழந்தைகளும் மக்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் வேலைக்கு செல்லும் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும், பெண்களுக்கும் தற்போது இயங்கி வரும் அரசு பேருந்து போதுமான எண்ணிக்கையில் இல்லை. எனவே S1 பேருந்து வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பப்பட்டது.