விவசாயத்தில் செலவினை குறைத்து அதிக லாபம் பெற வேளாண்மை துறை அறிவுரை

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே குமாரபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குமாரபட்டி  கிராமத்தில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டப் பகுதி உப்பார் உபவடி நிலப்பகுதி விவசாயிகளுக்கு உழவர் வயல்வெளி பள்ளி பயிற்சி மாவட்டம் வேளாண்மை துணை இயக்குனர் செல்வி தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-11-25 07:25 GMT
சிவகங்கை மாவட்டம், வேளாண்மை துணை இயக்குனர் (நுண்ணுயிர் பாசன திட்டம்) செல்வி கலந்துகொண்டு நுண்ணீர் பாசன திட்டம் மற்றும் தண்ணீரை சிக்கனப்படுத்தும் முறைகள் விவசாய விளைபொருளை மதிப்பு கூட்டும் முறைகள், விவசாயத்தில் ஏற்படும் செலவினை குறைத்து அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்பது பற்றியும் எடுத்துக் கூறினார்கள். மண் ஆய்வக வேளாண்மை அலுவலர்  பிரியா பொன் காயத்ரி மண் மாதிரியின் முக்கியத்துவம், மண்வள அட்டையை பயன்படுத்தி உர நிர்வாக முறைகள் மற்றும் உழவன் செயலியை பற்றி விரிவாக விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். குமாரபட்டி பகுதி உதவி வேளாண் அலுவலர் பாண்டீஸ்வரன் அரசு செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் இடுபொருள் மானிய விவரங்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்து கூறினார். இதில் குமாரபட்டி கிராமததை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடி வேளாண் சம்பந்தமான சந்தேகங்களை நிவர்தி செய்து கொண்டனர். வேளாண்மை அலுவலர் ஞானபிரதா, உதவி தொழில்நுட்ப அலுவலர் ராஜா உள்ளிட்டோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

Similar News