ராமநாதபுரம்ஒருங்கிணைந்த பள்ளி கல்வி பணியாளர் சங்கம் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி பணியாளர் சங்கம் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்பாட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் கீழ் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், கணினி விவர பணியாளர்கள், கணக்காளர்கள், சிறப்பாசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் இதுவரை வழங்கவில்லை எனவும், வரும் காலங்களில் மாத ஊதிய ஊதியத்தை மாத இறுதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி பணியாளர் சங்க கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் 30க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்பாட்டம் நடந்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்ததுடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாக அளித்ததாக அனைத்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி பணியாளர் சங்க கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.