ராமநாதபுரம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது
ராமநாதபுரம் நகர் கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் தலைமையில், மாபெரும் மனித சங்கிலி போராட்டம். நடைபெற்றது
ராமநாதபுரம் தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து உயா்த்தப்பட்ட சொத்து வரியை மக்கள் நலன் கருதி உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி அதிமுக சாா்பில் தமிழகம் முழுவதும் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்துவதற்கு மக்கள் விரோதச் சட்டங்களை துணிவுடன் எதிா்க்கும், முன்னாள் முதல்வரும் கழக பொதுச்செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா். மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் அதிமுக, திமுக ஆட்சியில் நடைபெறும் பல்வேறு ஊழல்கள் மற்றும் முறைகேடுகளை அவ்வப்போது நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி வருவதோடு, களத்தில் நின்று போராடி வருகிறது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு; நியாய விலைக் கடைகளில் குறித்த நேரத்தில் பொருட்கள் வழங்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத திட்டங்களை கண்டித்து, ராமநாதபுரம் நகர் கழகம் சார்பில், ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் முன்பாக, மாவட்டக் கழக செயலாளர் எம் ஏ முனியசாமி தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று இதில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன், கழக அம்மா பேரவை செயலாளர் ஜி. முனியசாமி, ராமநாதபுரம் நகர் கழக செயலாளர் பால்பாண்டியன், ராமநாதபுரம் ஒன்றிய கழக செயலாளர் அசோக்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு விருதுநகர் மண்டல துணைச் செயலாளர் அரவிந்த் ஐடி விங் மாவட்ட செயலாளர் நாகராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் செந்தில் குமார் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், மக்களவை, பேரவை முன்னாள் உறுப்பினா்கள், சாா்பு அணிகளின் நிா்வாகிகள், அமைப்புப் பிரதிநிதிகள், தொண்டா்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.