புகலூர்-திமுக அரசை கண்டித்து அதிமுக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
புகலூர்-திமுக அரசை கண்டித்து அதிமுக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
புகலூர்-திமுக அரசை கண்டித்து அதிமுக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. திமுக அரசு பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் ஆண்டுதோறும் மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வால் பல்வேறு வகைகளில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதை கண்டித்து அதிமுக சார்பில், தமிழக முழுவதும் இன்று மனித சங்கிலி போராட்டங்கள் நடைபெறும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து கரூர் மாவட்டம், புகலூர், வேலாயுதம்பாளையம் ரவுண்டானா அருகே அதிமுக மாவட்ட அவை தலைவர் திரு.வி. கா. தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். ரவுண்டானா வில் இருந்து இருபுறமும் கைகோர்த்தபடி ஆண்கள் பெண்கள் என அதிமுகவினர் நீண்ட வரிசையில் நின்று தமிழக அரசின் விலைவாசி உயர்வு குறித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் அதிமுக பேரூராட்சி மாமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய உறுப்பினர்கள், பல்வேறு அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.