அரசுப் பள்ளி கட்டிடம் தரமற்ற முறையில் கட்டப்படுவதாக சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு
பள்ளிபாளையத்தில் அரசு பள்ளி தரமற்ற முறையில் கட்டப்படுவதாக சமூக ஆர்வலர் புகார் தெரிவித்துள்ளார்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட கண்டிபுதூர் பகுதியில் நகராட்சி துவக்கப்பள்ளி கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கட்டிடங்களுக்கு கட்டப்பட்டுள்ள கம்பிகள் வளைந்தும் நெளிந்தும் உள்ளதாக சமூக ஆர்வலர் ஆதவன் இது குறித்த தகவலை சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா அவர்கள் பள்ளிபாளையம் நகராட்சி பொறியாளரை நேரில் சென்று ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும் இதுகுறித்து சமூக ஆர்வலர் ஆதவன் கூறும் பொழுது அரசுப்பள்ளி கட்டுமான பணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள இரும்பு கம்பிகள் கட்டுமான பணிகளுக்காக திட்டமிடப்பட்டுள்ள இடத்திலிருந்து நகர்ந்து வளைந்தும் நெளிந்தும் உள்ளது. இதனால் இதே பாணியில் கட்டிடம் கட்டப்பட்டால் எதிர்காலத்தில் கட்டிடம் பாதுகாப்பில்லாத நிலை ஏற்படும். எனவே கட்டிடம் கட்டும் போதே முழுமையாக திட்டமிட்டபடி தரமான முறையில் பள்ளி கட்டிடம் கட்ட வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.