ஞானமணி தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம்: முனைவர் கே உதயகுமார் பங்கேற்பு.

நாமக்கல்: ராசிபுரத்தில் ஏகே சமுத்திரத்தில் அமைந்துள்ள ஞானமணி தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் மின் மற்றும் மின்னணு பொறியியல் இணைந்து நடத்திய தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம்.

Update: 2024-10-10 12:59 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் ஏ.கே. சமுத்திரத்தில் உள்ள ஞானமணி தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல், மின் மற்றும் மின்னணு பொறியியல் இணைந்து நடத்திய தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் "ஞான் இலக்ட்ரா கம்முனிக்ஸ் 2K24" நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஞானமணி கல்வி நிறுவனங்களின் தலைவர் அரங்கண்ணல், தாளாளர் மாலாலீனா அவர்கள் தலைமையேற்று குத்துவிளக்கு ஏற்றி விழாவினை துவக்கி வைத்தனர். தலைமை நிர்வாக அதிகாரி பிரேம்குமார் தலைமை உறையாற்றினார். கல்லூரியின் முதல்வர் கண்ணன் வரவேற்புறை வழங்கினார். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக, அண்ணா பல்கலைக்கழகத்தின் மின்னியல் துறையின் பேராசிரியரும், CUIC-ன் முன்னாள் துணை இயக்குநருமான முனைவர் கே.உதயகுமார் பங்கேற்றார்.சிறப்பு விருந்தினர் முனைவர் கே.உதயகுமார் பேசுகையில் எதிர்காலத்தை கணிக்க சிறந்த வழி அதை உருவாக்குவதுதான் அதுவே பொறியியலாளர்களின் கடமை என்பதை உணர்த்தினார். உலகை மாற்ற நீங்கள் பயன்படுத்தக்கூடிய மிக சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி 61601 உறையாற்றினார் உயர்ந்த நம்பிக்கையை கொண்டு உங்களை நம்புங்கள். நீங்கள் நம்புவதை விட நீங்கள் தைரியமானவர்கள் மற்றும் நீங்கள் நினைப்பதை விட புத்திசாலியானவர்கள். ஒருபோதும் முயற்ச்சியை கைவிடாதீர்கள் என்று ஊக்குவித்தார். மின் மற்றும் மின்னணு பொறியியல், மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை சார்ந்த மாணவர்களுக்கு மென்பொருள் தொழிலகங்களில் உள்ள வேலைவாய்ப்புகளை எடுத்துரைத்தார். நான்கு ஆண்டுகள் படிப்பினை முதலீடு செய்து நாற்பது ஆண்டுகளின் பலன்களை அறுவடை செய்ய அறிவுறித்தினார். மேலும் பொறியியல் மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. ஆனால், மாணவர்கள் அதற்கு ஏற்றவாறு தங்களை வடிவமைத்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் புத்தகத்தில் உள்ள பாடங்களை படிப்பதோடு மட்டுமல்லாமல் கோ-இன்ஜினியரிங் எனப்படும் தொழிற்சார்ந்த பல்வேறு நவீன தொழில்நுட்பங்களைப் பற்றி அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று அறிவுறுத்தினார். கல்வி என்பது எதிர்காலத்திற்கான பாஸ்போர்ட், ஏனென்றால் நாளை அதற்குத் தயாராகிறவர்களுக்கு சொந்தமானது என்றுரைத்தார் உங்களைப் பெருமைப்படுத்தி, உங்கள் நிறுவனத்தை பெருமைப்படுத்துங்கள் என ஊக்குவித்தார். பல்வேறு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மாணவ மாணவியர் விழாவில் பங்கேற்று பேப்பர் பிரசென்டெசன், ப்ரொஜெக்ட் பிரசென்டெசன், தொழில்நுட்ப வினாடி வினா, குறும்படம் மற்றும் லைவ் போட்டோகிரஃபி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று தங்களின் படைபாற்றலை வெளிப்படுத்தினர். சிறப்பு விருந்தினர் முனைவர் கே.உதயகுமார் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களை பாராட்டி சான்றிதழும் பரிசு தொகையினையும் வழங்கினார். கல்லூரியின் முதல்வர் கண்ணன் நன்றியுரையாற்றினார். விழா இனிதே நிறைவுற்றது.

Similar News