புரட்டாசி மாத சீனிவாச பெருமாள் தேர் திருவிழா
ஆரணி அக், 10 ஆரணி அடுத்த ஆவணியாபுரம் அருள்மிகு லட்சுமி நரசிம்ம ஸ்வாமி திருக்கோயிலில்புரட்டாசி மாத பிரம்மோ ற்சவ விழாவில்நேற்று நடைபெற்ற சீனிவாச பெருமாள் தேர்த் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஸ்ரீ தட்சண அகோபிலம் எனும் ஆவணியாபுரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ லட்சுமி நரசிங்க சுவாமி திருக்கோவில் சிம்ம மலையில் உள்ள ஸ்ரீ சீனிவாச பெருமாளுக்கு திருப்பதி ஏழுமலையானுக்கு நடைபெறும் புரட்டாசி மாத பிரம்மோற்சவம் பெருவிழாவை போன்றுஆவணியாபுரம்லட்சுமி நரசிம்மர்கோயிலில் கடந்த நான்காம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் காலை மாலை என பல்வேறு வாகனங்களில் சீனிவாச பெருமாள் ஸ்ரீதேவி பூதேவுடன் அலங்கார ரூபத்தில் வீதி உலா வந்தார்.நேற்று முன்தினம் திருக்கல்யாணம்வைபவமும் நேற்று 7ம் நாள் தேர்திருவிழாவில் சீனிவாச பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் புஷ்ப அலங்காரத்துடன் தேரில் அமர்த்தப்பட்டு மலையை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இதில் திரளான பக்தர்கள்கொட்டும் மழையில் கலந்து கொண்டு,வெங்கட்ரமணா ,சீனிவாசா , வைகுண்ட வாசா, கோவிந்தா என சரண கோஷம் எழுப்பி வடம் பிடித்து தேர் இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.புருஷோத்தமன் சுவாமிகள் தலைமையில் பஜனை குழுவினர்பக்தி பாடல்களை பாடியபடி மலையை வலம் வந்தனர். விழா ஏற்பாடுகளை இந்து அறநிலைத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்சன் இணை ஆணையர் சிவலிங்கம் துணை ஆணையர் ஜோதிலட்சுமி ஆய்வாளர் ராகவேந்தர் செயல் அலுவலர் சரண்யா அறங்காவலர் குழு தலைவர் வெங்கடேசன் உறுப்பினர்கள் குமார், பூங்காவனம், மாலதி, வெங்கடேசன், குமார், ஊராட்சி மன்ற தலைவர் போத்தம்மாள் துணைத் தலைவர் விஜயகுமார் மற்றும் விழா குழுவினர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.