8975 அதிமுகவினருக்கு உறுப்பினர் உரிமை சீட்டு மாவட்ட பொறுப்பாளர் நேரில் கள ஆய்வு
ஆரணி, அக்.11 செய்யாறில் 8975 அதிமுகவினருக்கு உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கப்பட்டதை மாவட்ட பொறுப்பாளர் வாலாஜாபாத் பா.கணேசன் நேற்று நேரில் கள ஆய்வு செய்தார்.
ஆரணி, அக்.10 செய்யாறில் 8975 அதிமுகவினருக்கு உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கப்பட்டதை மாவட்ட பொறுப்பாளர் வாலாஜாபாத் பா.கணேசன் நேற்று நேரில் கள ஆய்வு செய்தார். திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் செய்யாறு நகர அதிமுகவில் கழக ரீதியாக 35 வார்டுகளில் தமிழக எதிர் கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆணையின்படி அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் உரிமைச் சீட்டு வழங்கிட திட்டமிடப்பட்டது. அதன்படி செய்யாறு நகரில் 8975 அதிமுக உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டு செய்யாறு நகரத்தில் உள்ள அதிமுக உறுப்பினர்களுக்கு முறையாக வழங்கப்பட்டுள்ளதா என அதிமுக தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளரும் கழக அமைப்புச் செயலாளருமான உத்தரமேரூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் அமைச்சரும், அமைப்புச் செயலாளருமான முக்கூர் என்.சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளரும் முன்னாள் செய்யாறு எம்எல்ஏ.வுமான தூசி கே.மோகன் ஆகியோர் நகரத்தில் உள்ள வார்டுகளில் உறுப்பினர்களுக்கு வழங்கியதை கள ஆய்வு செய்தனர். ஆய்வின்போது செய்யாறு நகர செயலாளரும் கவுன்சிலருமான கே.வெங்கடேசன், நகர அவைத் தலைவர் ஏ.ஜனார்த்தனன், மாவட்ட துணை செயலாளர் டி.பி.துரை, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பி.அருண், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு எச்.சுரேஷ்குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் என்.அரவிந்தன், வார்டு செயலாளர் ஜி.தனிகாசலம், ஜி.பூபதி, கே.ராஜி, எம்.இளையராஜா, ஜெ.வெங்கடேசன், கே.எ.கன்னியப்பன், எஸ்.சுரேஷ் குமார், மோகன், ஜோதி, சுந்தரமூர்த்தி, ஒன்றிய பாசறை செயலாளர் தவமணி, தூசி ஊராட்சி மன்ற தலைவர் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர்.