ஆண்டிபட்டி அருகே மருத்துவம் படிப்பதற்கு ரூபாய் 71 லட்சம் கல்வி கடன் உதவி தொகை வழங்கப்பட்டது
தேனி மாவட்ட ஆட்சியர் சஜிவனா பங்கேற்று மாணவர்களுக்கு கல்வி கடன் உதவி தொகை வழங்கி சிறப்பித்தார்
மருத்துவம் படிக்கும் மாணவனுக்கு ரூபாய் 71 லட்சம் கல்வி கடன் உதவித்தொகை வழங்கப்பட்டது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் மாணவர்களுக்கான கல்வி கடன் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா பங்கேற்று கல்வி படிக்கும்போது எவ்வாறு உதவி தொகை வழங்கப்படும் என்றும் கடன் உதவித்தொகையினை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பதை பற்றியும் சிறப்புரையாற்றினார் .மேலும் இந்த உதவி தொகை வழங்கும் விழாவில் பெரியகுளம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற மாணவர் சென்னை எஸ் ஆர் எம் மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வருகிறார் இவருக்கு ரூபாய் 71 லட்சம் கல்வி கடன் உதவித்தொகை வழங்கப்பட்டது