"நிறைந்தது மனம்" கடலை மிட்டாய் கம்பெனி ஆய்வு செய்தார் ஆட்சியர்.

"நிறைந்தது மனம்" கடலை மிட்டாய் கம்பெனி ஆய்வு செய்தார் ஆட்சியர்.

Update: 2024-10-10 13:03 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
"நிறைந்தது மனம்" கடலை மிட்டாய் கம்பெனி ஆய்வு செய்தார் ஆட்சியர். கரூர் மாவட்டம், மண்மங்கலம் பகுதியில் தொழில் செய்து வரும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களிடம் "நிறைந்தது மனம்" என்ற நிகழ்ச்சியில் நேரடியாக அவர்களுடைய தொழில் செய்யும் இடத்துக்கு சென்று பார்வையிட்டார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல். தமிழகத்தில் மகளிர் தற்சார்பு நிலை மற்றும் நிலைத்த, நீடித்த வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுய தொழில் புரிய இதுவரை இல்லாத வகையில் அதிக அளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்றைய தினம் மண்மங்கலம் தாலுகா, குடுகுடுத்தானுரில் புன்னகை சுய உதவி குழுவினர் ரூ. 7.67 லட்சம் கடனுதவி பெற்று, கடலை மிட்டாய் செய்து வருவதையும், கரூர் வட்டம், புலியூரில் மகா சுய உதவி குழுவினர் 12 லட்சம் கடன் உதவி பெற்று ஐஸ்கிரீம் உற்பத்தி செய்வதை பார்வையிட்டு, அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்தி அதன் மூலம் பெற்று வரும் பொருளாதாரம் மற்றும் சமுதாய முன்னேற்றம் குறித்து அவர்கள் தெரிவித்த கருத்துக்களை கேட்டுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் தங்கவேல், தொடர்ந்து வாழ்வில் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி வெற்றி பெற வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் போது மகளிர் திட்ட இயக்குனர் பாபு உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Similar News