ராமநாதபுரம் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்
பரமக்குடிஇம்மானுவேல் சேகரன் மணிமண்டப கட்டுமான பணி அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு தமிழக அரசு சார்பில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருவுருவச்சிலையுடன் கட்டப்பட்ட வரும் மணிமண்டப கட்டிடப்பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது கட்டிடம் உறுதியான முறையில் கட்டப்பட்டு வருகிறதா என மண் பரிசோதனை, நீர் பரிசோதனை என அனைத்து முடிவுகளையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின் செய்தியாளர்களிடம் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு பேசுகையில், தமிழக அரசு சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகருக்கு மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மணிமண்டபம் ஆண்டிற்கு இரு முறை மட்டுமே பயன்படுத்த க்கூடியதாக இருக்காமல் பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் பல்நோக்கு அரங்கமாக செயல்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டி ஷர்ட் அணிந்து அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது ஆடை அணிவது அவரவர் சுதந்திரம் என தெரிவித்தார்..