சாலையில் பூசணியை உடைக்க கூடாது என விழிப்புனர்வு பிரச்சாரம்
குமாரபாளையம் நகரில் சாலையில் பூசணியை உடைக்கக் கூடாது என விழிப்புனர்வு பிரச்சாரம் செய்தனர்
. நாமக்கல் மாவட்டம் ஆயுத பூஜை நாளில் குமாரபாளையம் பகுதிகளில் உள்ள கடைகள், மற்றும் விசைத்தறி பேக்டரியில் பூஜை போட்டு பூசணிக்காயை நடு ரோட்டில் உடைத்து விடுகிறார்கள். இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கவனிக்காமல் விழுந்து விடுகிறார்கள். சிலநேரங்களில் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுகிறது. கடை வியாபாரிகள் நடுரோட்டில் பூசணிக்காய் உடைக்க கூடாது என வலியுறுத்தி விடியல் ஆரம்பம் சார்பில் குமாரபாளையம் பல்வேறு பகுதிகளில் எஸ்.எஸ்.ஐ.க்கள் பழனிச்சாமி, சமாதானம் ஆகியோர் பள்ளிபாளையம் பிரிவு சாலை, ஆனங்கூர் பிரிவு சாலை, மார்க்கெட், மற்றும் கடைகளுக்குச் சென்று விழிப்புணர்வு துண்டு அறிக்கைகள் வழங்கினார்கள். பூசணிக்காய் விற்பவர்களிடம் மற்றும் வாங்குபவர்களுக்கும் துண்டு அறிக்கை கொடுத்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். இதில் விடியல் பிரகாஷ், பஞ்சாலை சண்முகம், குருமணிநாதன், ஈஸ்வரமூர்த்தி, தீனா, தண்டாயுதபாணி, மணி கிருஷ்ணா, சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.