விராலிமலை: விராலிமலை ஒன்றியம் பூதகுடி காலனியை சேர்ந்தவர் முத்து(70). கூலித்தொழிலாளி. குடும்ப பிரச்னை காரணமாக கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வேட் டியால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண் டார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.