சேந்தமங்கலம் பேரூராட்சியில் புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி!-கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி துவக்கி வைத்தார்

சேந்தமங்கலம் பேரூராட்சியில் ரூ.605.00 லட்சம் மதிப்பீட்டில் காரவள்ளி இருவட்டாறு தலைமை நீரேற்று நிலையம் முதல் பேருந்து நிறுத்தம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் அண்ணாநகர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி (குப்பநாயக்கனூர்) வரை ஏற்கனவே உள்ள மெயின் பைப் லைன் மாற்றியமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

Update: 2024-10-17 15:53 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சேந்தமங்கலம் பேரூராட்சியில் 8.8 ச.கி.மீ பரப்பளவு கொண்டது. இப்பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சியின் மக்கள் தொகை 19750 மற்றும் தற்போதைய மக்கள் தொகை சுமார் 21528 ஆக உள்ளது. இப்பேரூராட்சியில் சொந்த குடிநீர் ஆதாரமான காரவள்ளி கருவாட்டாறு திட்டத்தின் மூலம் 13.25 கிலோ மீட்டர் நீளத்திற்கு குடிநீர் விநியோக குழாய் அமைக்கப்பட்டு 7 மேல்நிலை தொட்டிகள் மூலம் நாளொன்றுக்கு 70 LPCD குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. காரவள்ளி கருவட்டாறு குடிநீர் திட்டமானது 1984 ஆம் வருடம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் சுமார் 25 வருடங்களுக்கு மேல் ஆவதால் பல்வேறு இடங்களில் பைப் லைனில் உடைப்புகள் ஏற்பட்டு குடிநீர் வீணாவதுடன் பொதுமக்களுக்கு குடிநீர் சீராக விநியோகம் செய்ய இயலாத சூழ்நிலை ஏற்படுவதால் புதியதாக 2024-25-ஆம் ஆண்டுக்கான கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் மூலம் சேந்தமங்கலம் பேரூராட்சியில் ரூ.605.00 லட்சம் மதிப்பீட்டில் காரவள்ளி இருவட்டாறு தலைமை நீரேற்று நிலையம் முதல் பேருந்து நிறுத்தம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் அண்ணாநகர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி (குப்பநாயக்கனூர்) வரை ஏற்கனவே உள்ள மெயின் பைப் லைன் மாற்றியமைப்பதற்கான பூமி பூஜையினை நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் துவக்கி வைத்தார்.இந்நிகழ்வில் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே.பொன்னுசாமி, சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் அ.அசோக்குமார், சேந்தமங்கலம் பேரூர் செயலாளர் ந.தனபாலன், காளப்பநாயக்கன்பட்டி பேரூர் செயலாளர் டி.என்.முருகேசன், சேந்தமங்கலம் பேரூராட்சி தலைவர் சித்ரா தனபாலன், நாமக்கல் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் வெ.பெ.இராணி பெரியண்ணன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் எம்பரர் வ.இளம்பரிதி, கலைவாணன், சார்பு அணி நிர்வாகிகள் சாம் சம்பத், ஆனந்த்பாபு, பொன் சித்தார்த், பா.கிருபாகரன் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

Similar News