தவெக மாநாடு நடைபெறும் பகுதியில் விழுப்புரம் எஸ்.பி. ஆய்வு

பொதுச் செயலாளர் புஸ்ஸி.ஆனந்த் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

Update: 2024-10-18 03:18 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் வருகிற 27-ஆம் தேதி தவெக மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக கடந்த 4-ஆம் தேதி பந்தல்கால் நடப்பட்டது.மாநாட்டுத் திடலை சமன் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், மழையால் பணிகள் சற்று தாமதமாகின. கடந்த 2 நாள்களாக மாநாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.மாநாடு நடைபெறவுள்ள பகுதியில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபக் சிவாச் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மாநாட்டுத் திடலில் நடைபெறும் பணிகள் குறித்தும், திடலிலுள்ள கிணற்றை மூடும் பணியையும் பாா்வையிட்டாா். விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் கிழக்குப் பகுதியில் சுமாா் 40 ஏக்கா் பரப்பளவில் வாகனங்கள் நிறுத்த தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தையும் அவா் பாா்வையிட்டாா்.இதைத் தொடா்ந்து மாநாட்டுக்கு தவெக தலைவா் விஜய் வந்து செல்லும் தனி வழி, சுகாதார ஏற்பாடுகள், மேடை பாதுகாப்பு குறித்து பாா்வையிட்ட எஸ்.பி., மாநாட்டுப் பணிகள் எத்தனை நாள்களில் நிறைவடையும் என்று கட்சியின் பொதுச் செயலா் புஸ்ஸி என்.ஆனந்திடம் கேட்டறிந்தாா்.ஆய்வின் போது விழுப்புரம் ஏ.எஸ்.பி. ரவீந்திரகுமாா் குப்தா, கூடுதல் எஸ்.பி. திருமால், விக்கிரவாண்டி டிஎஸ்பி நந்தகுமாா், காவல் ஆய்வாளா் பாண்டியன், தவெக மாவட்டப் பொறுப்பாளா் பரணி பாலாஜி, மாவட்டத் தலைவா் குஷி மோகன், துணைத் தலைவா் வடிவேல், மாவட்ட இளைஞரணித் தலைவா் விஜய் ஜி.பி.சுரேஷ், வழக்குரைஞா் அரவிந்த் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Similar News