திருநெல்வேலி மாவட்டத்தின் மழை அளவு விபரம்

மழை அளவு விபரம்

Update: 2024-10-20 03:34 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நெல்லை மாவட்டம் முழுவதும் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 5.1 சென்டிமீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ராதாபுரத்தில் 13 மில்லி மீட்டரும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான நாலு முக்கில் 11 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. காக்காட்சி மலைப்பகுதிகளில் ஏழு மில்லி மீட்டர் ஊத்து பகுதியில் ஒன்பது மில்லி மீட்டர் மாஞ்சோலையில் 5 மில்லி மீட்டர் சேரன்மகாதேவியில் ஒரு மில்லி மீட்டரும் நான்கு நேரியில் இரண்டு மில்லி மீட்டரும் களக்காட்டில் 2.8 மில்லி மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது. மாவட்ட சமவெளி மற்றும் மலைப்பகுதிகளில் பதிவான மொத்த மழை அளவு 51 மில்லி மீட்டர் ஆகும்.பாபநாசம் அணைக்கு 24.49 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.மணிமுத்தாறு அணைக்கு இரண்டு கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

Similar News